Posts

Showing posts from August, 2020

மெய்யறிவு அறிதல்

 பதிவு : 11 தலைப்பு : மெய்யறிவு அறிதல் படைத்தப்பொருள்  ஓன்றிருக்கயில் படைத்தவன் ஓருவன் இருக்க வேண்டுமே தோற்றம் ஓன்றிருக்கயில் தோற்றுவிப்பவன் ஓருவன் இருக்க வேண்டுமே இயக்கமொன்று இருக்கயில் இயக்குனர் ஓருவன்  இருக்க வேண்டுமே நம்மை படைத்த இறைவனை நாடுவது மெய்ஞ்ஞானம் நாம் படைத்த இறைவனை நாடுவது பொய்ஞ்ஞானம் நகல் வழிபாட்டை எதிர்ப்பது நாத்திகம் தன்னகத்துள் நாதனைக்காண்பது ஆத்திகம் கடவுள் எங்கே என கேடப்பது முற்ப்போக்கு காரணதேகத்தில் ஓளிவடிவாய் தன்னுள் கான்பது நற்ப்போக்கு ஏழுவகைத்தோற்றம், ஆறறிவு,  ஐந்து எழுத்து மநதிரம், நான்கு வகை யோனி,  மூன்று உலகம், இரண்டு வகை மரணம், ஓர் உயிரை தன்னுள் கொண்டவன் மனிதன் மெய்குரு அருளால் தன் இதயத்தில் இறைவனை கண்டவன் மனு ஈசன் எழுத்து - இரா.ராகவேந்திரன்

இன்பம் எங்கே

 பதிவு : 12 தலைப்பு : இன்பம் எங்கே மாடமாளிகையில் வசித்திருந்தும் பெட்டகமுழுதும் பொன்னிறைந்தும் பெண்டுபிள்ளை அருகிறுந்தும் கண்ணில் முன்னறியாதொரு ஏக்கம் மனதில் இனம்புரியாதொரு பாரம் பசிக்குமுன்பே ருசித்து உண்டும் சிற்றினபம் நாடியடைந்த பின்பும்        நிறைவடையா நிலவைப்போல் வாழ்க்கை என்னும் சுழரும் வட்டம் இதயமோரத்தில் ஏனோ ஓரு சோகம் என்னவென்று வினா அரியாமல் விடைதேடி நடைதுவங்கிய பயணம் காடு மலை தேடி திரிந்து சரனடைய அரியாமை எனும் பேரிருள் நீக்க பெற்றதொரு மெய்குரு பொற்ப்பாதம் ஞானமெனும் சுடரென்னுள் ஏற்றி உள்ளம் கோவில் உடம்பே ஆலயம் தன்னை அறிபவருக்கு சீவனே சிவம் என என் இதயதில் ஈசனை காட்டி நித்திய பேரின்பத்தில் ஆழ்த்திய   குருநாயகா போற்றி போற்றியே. இரா. ராகவேந்திரன்...

சோழனும் தமிழனும்

 பதிவு : 13 தலைப்பு : சோழனும் தமிழனும் பஞ்சத்தில் உதவுமென கலசத்தினுள்  நெல்லை சேமித்த சோழன் அன்று  பாட்டன் நிலத்தை வீட்டுமனையாக்கி விற்று வருகிரான் தமிழன் இன்று கடற்ப்படைகொண்டு நாடுகள் பல வென்று  புலிக்கொடி நாட்டினான் சோழன் அன்று கடைத்தெருவில் மேடை அமைத்து கட்சிக்கொடி ஊனுகிறான் தமிழன் இன்று வெள்ளம் தடுக்க காவிரி குறுக்கே  கல்லனை கட்டினான் சோழன் அன்று வரண்ட ஆற்றின் மணலையும் திருடி விற்க்கிரான் தமிழன் இன்று கடல்க்கடந்து வணிகம் செய்து கலை அறிவியல் வளர்த்தான் சோழன் அன்று கல்வி மருத்துவம் மதுவைக்கூட வணிகமாக்கினான் தமிழன் இன்று வடக்கே பாலப்பேரரசை வென்று கங்கை வரை எல்லை கொண்டான் சோழன் அன்று காவிரி கட்சத்தீவில் உரிமைக்காக்க தவறியதால். கன்னடமுதல் இலங்கை வரை தொல்லை  கொண்டான் தமிழன் இன்று -இரா. ராகவேந்திரன்

நெஞ்சில் ஓர் ஈரம்!!

பதிவு - 1 தலைப்பு - நெஞ்சில் ஓர் ஈரம்!! பள்ளித்தோழியின் குறுஞ்செய்தி  புலனியில் கண்டேன்! இளங்காலை பனிப்போல்  நெஞ்சில் ஓர் ஈரம்!! முகநூலில் சொல்ல மறந்த காதலைக்கண்டேன்! பாலைவணத்தில் காணல்நீர்ப்போல் நெஞ்சில் ஓர் ஈரம்!! ஒருதலைக்காதல் மணமுடித்து விலகிட கணடேன் பொங்கிடும் எரிமலையை தழுவும்  கடலலைப்போல் நெஞ்சில் ஓர் ஈரம்!! நெகிழ்ப்பாறை என வாழ்க்கை  மெல்ல மெல்ல நகர கண்டேன் இருந்தும் உறைப்பனிப்போல்  நீங்காமல் நெஞ்சில் ஓர் ஈரம்!! சாளரத்திரை விலகி கதிரொளியில்  மண உரவின் இன்முகம் கண்டேன்! பாறைவிரிசலில் முளைவித்து உணர்வதைப்போல்  நெஞ்சில் ஓர் ஈரம்!! அதிகாலை புதுமலர்ப்போல்  மார்பில உறங்கும் என் மகள்! பருவமழையின் முதல்ச்சாரல்ப்போல் என் நெஞ்சில் ஓர் ஈரம்!! -இரா. ராகவேந்திரன்

பூனூலின் வேதம்

பதிவு - 10 தலைப்பு - பூனூலின் வேதம் உபநயனம் எனும் குருவருள் பெற்று எக்ஞ்யோபவீதம் எனும் பூநூல் அணிந்தே ப்ரம்மகிரன்தி என அதர்வ முடிச்சிட்டு காயத்ரி எனும் ஜீவமந்திரம் உபதேசித்து முப்புரி பூநூலில் வேதம் விளக்கியே மெய்ப்பொருளை என்னுள்ளே காட்டிய என் குருநாயகா போற்றியே மும்மூர்த்தியும் முப்பெரும் தேவியை குறிக்கும் மூன்று நூல் ருக், யஜுர், சாமவேத்தை குறிக்கும் மூன்று நூல் சத்வ, ராஜஷ, தாமஸத்தை குறிக்கும் மூன்று நூல் முக்காலத்தை குறிக்கும் மூன்று நூல் விழிப்பு, கனவு, அமைதி எனும்  அவஸ்தையை குறிக்கும் மூன்று  இகம், பரம், அகலோகம் குறிக்கும் மூன்று நூல் தியானம் பக்தி கர்மங்களை குறிக்கும் மூன்று நூல் மூவகை அக்கினியை குறிக்கும்  மூன்று நூலின் வேதம் விளக்கி  என்னுள்ளே காட்டிய என் குருநாயகா போற்றியே ப்ரம்மச்சர்யம் கடைப்பிடிப்போர்க்கு மூன்று நூல் க்ருஹஸ்தனாய் வாழ்வோருக்கு ஆறுநூலும் வனப்ரஸ்தனாக வாழ்வோருக்கு ஓம்,  அக்கினி, நாகம், சந்திரன், பித்ரூ, பிரஜாபதி,  வாயு, யமன், விஷ்வதேவ னை குறிக்கும்  ஓன்பது நூலில் வேதம் விளக்கியே மெய்ப்பொருளை என்னுள்ளே காட்டிய என் குருநாயகா போற்றியே   -இரா.ராகவேந்திரன்

சிவனே சீவன்

பதிவு: 9 தலைப்பு : சிவனே சீவன் பிண்டமெனும் இக்கடத்தின் உள் இருப்பதனால் 'கடவுள்' என்கிறோம் ஆரிருள் உய்க்கும் சாவை மீறியதனால் 'சாமி' என்கிறோம் அணுவினுள் அண்டத்தை கண்டதனால் 'அனுமன்' என்கிறோம் ப்ரம்மத்தை தன்னுள் அறிந்தவனை பிராமணன் என்கிறோம் சிவனே சீவன், சீவனே சிவன் என தம்மிதயம் பிரகாசமாக ஆக்க பெற்றாரை மனு ஈசன் என்கிறோம் இதயகமலத்தில் வசிப்பவரென வைணவம் சொன்னது ஈசனிருப்பிடம் இருதயத்திலே என சைவம் சொன்னது இவையிரண்டும் ஓன்றென சான்றோர் சொன்னது உடம்பினுள் உத்தமனைகான் என அவ்வை சொன்னது தம்முள் இறைவனை காண்பதே பிறவிப்பயன் என வேதம் சொன்னது தூலதேகம், ஜீவதேகம்,  சூக்குமதேகம்,  காரணதேகம், மாகாரணேதகம், ஹம்ஸதேகம்,  பரமஹமஸ தேகமென ஏழு வகை தேகத்தை இவ்வுடம்பினுள் காட்டியே சரணடைந்த எனை ஆட்கொண்டு பிறப்பெனும் பிணியருக்க வந்த என் குரு தாழ் போற்றி போற்றியே. -இரா.ராகவேந்திரன்

மனு ஈசன்

பதிவு : 8 தலைப்பு : மனு ஈசன் அடக்கம் அமரருள் உய்க்கும்  என வள்ளுவன் குறிப்பிடுவது  பகுத்தறிவின் சிட்றறிவில் தன்னடக்கமோ இல்லை தன்னுள் சிவனை கண்ட மேலோரின் மண்ணடக்கமோ அறிவதனைக்கொண்டு அறிவதனைக்கணடு காலன் கைவசப்படும்முன்னே ஆறிருள் உய்க்குமுன்னே மெய்ப்பொருள் காண்பது அறிவு இக்கடத்தினுள் சிவனை அறிந்து அக்கடத்துள்ளாக்கி நித்தியவாழ்வை பெரவந்தமனு பிறவி எனும் பிணியறுக்கவந்த மெய்க்குருவிடம் சரணடைந்து ஏழுப்பிரப்பும் இவ்வுடம்பில் கண்டு மறுபிறப்பாளராக மாற்றக்கண்டு நித்திய பேரின்ப வாழ்வினுக்கே வந்தமனு -இரா.ராகவேந்திரன்

காதலும் கடந்து போகும்

பதிவு : 7 தலைப்பு : காதலும் கடந்து போகும் கண்ணின் அருகே விழும் நெற்றி கூந்தலை காதோரம் நீ விலக்கிய போது நிமிர்ந்து சற்றே பார்த்த உன் முகம்  வீசும் காற்றில் ஆடும் சாளரத்திரை விலகி  இளங்காலை கதிர் போல் என் நெஞ்சில் பாயும் அன்று உன்னோடு நின்றது என் நேரம் ஆனால்  சொல்லாத காதலும் கடந்து போகும் தோழியுடன் மெல்ல நீ சிரித்த சத்தம் பளிங்கில் அவிழ்ந்து விழும் முத்துச்சரம் உன்னை கடந்த சென்ற போது நுகர்ந்த சுவாசம் மழைத்துளி தொட்டதும் எழும் காய்ந்த மண்வாசம் அன்று உன்னோடு நின்றது என் நேரம் ஆனால்  சொல்லாத காதலும் கடந்து போகும் காதலை சொல்ல அன்று வார்த்தை இல்லை வார்த்தை இருந்த போது அன்று காலமில்லை காலமும் வார்த்தையும் இருந்த போது அருகில் நீ இல்லை மூன்றுமிருந்த போது உனை மணக்கோலத்தில் கண்ட நேரம் அன்று உன்னோடு நின்றது என் நேரம் ஆனால்  சொல்லாத காதலும் கடந்து போகும். -இரா.ராகவேந்திரன்

அக்னிபிரவேசம்

பதிவு : 6 தலைப்பு : அக்னிபிரவேசம் வால்மிகி ராமாயணத்தில் அன்று  சீதைக்கு ஒருமுறை அக்னிபிரவேசம் வேலை பார்க்கும் பெண்கலுக்கோ இன்று  புகுந்தவீட்டில் அன்றாடம் அக்னிபிரவேசம் கல்வியும் கனவும் சிறகாய் விரித்து வாழ்க்கை எனும் வானத்தில்  பருந்தாய் பறக்க என்னும்பொழுது சமூகமெனும் வலைவிரித்து குடும்பமெனும் கூண்டில் அடைத்து வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அன்றாடம் அக்னிபிரவேசம் ஆண் அதிகாரத்தின் அடிமையாய் பிள்ளையின் வெருப்புக்கு இலக்காய் புகுந்த வீட்டின் புறக்கணிப்பாய் கூலி இல்லா பணிப்பெண்ணாய் தன்மானமும் சுயமறியாதையுமின்றி நடுத்தரவயதில் வெருமைகொண்டு தனக்குள் புழுங்கி ஒடுங்கி வாழும் ஒவ்வொரு பெண்ணும் கண்ணகி போல் ரௌத்ரம் கொள்ளாவிடில் ஒவ்வொரு நாளும் அக்னிபிரவேசம்.  - இரா. ராகவேந்திரன்

பெண்ணின் தசாவதாரம்

பதிவு : 5 தலைப்பு : பெண்ணின் தசாவதாரம் பெண் என்பவள் ஓர் பத்துபாத்திரம் குலவியாய், பேதையாய், பெதும்பையாய்,  மங்கையாய் சில பாத்திரம்,  மடந்தையாய், அரிவையாய், தெரிவையாய் என சில  பேரிளம்பெண்ணாய், பிரவுடையாய்,  விருத்தை என பல தோற்றம் இவை  இயர்க்கையில் பெண் எடுக்கும் தசாவதாரம். பெண் என்பவள் ஓர் பத்துபாத்திரம் சேய்க்கு தாயாய் தாய்ககு சேயாய்  தலைவனிடம் துனைவியாய் வாழ்க்கை போரில் வீரமங்கையாய் விதியின் சதுரங்க ஆட்டத்தில் வீராங்கனையாய் நோயுற்ற பேருக்கு செவிலியாய் கவிஞனின் கற்பனைக்கு எழுத்தாய் ஓவியனின் பார்வைக்கு பேரழகாய் பசித்தவனுக்கு அன்னப்பூரணியாய் காதலனுக்கு இன்ப கனவாய் என பல தோற்றம்  இவை இவ்வுலகில் பெண் எடுக்கும் தசாவதாரம்! ஆனால்... சமூகம் பெண்ணுக்கு தந்த பத்துபாத்திரமோ கலங்கிய நீர் ஓடும் நதியாய் தனிமையும் வெருமையும் சுமக்கும் மலையாய் பிறந்த வீட்டில் பொருள் சுமையாய் புகுந்தவீட்டின் புறக்கனிப்பாய் கணவனின் கோபத்தின் இலக்காய் வீட்டில் ஊதியம் பெறா பணிப்பெண்ணாய் அக்கம் பக்கத்தாருக்கு வதந்தியாய் ஊடகத்தில் வரும் செய்தியாய் அலுவலகத்தில் படித்த அடிமையாய் விளம்பரத்தில் காட்சிப்பொருளாய் என பல தோற்றம் இவ

இறைவி நீ வாழ்க!

கவிதை # 2 இறைவி நீ வாழ்க! வேப்பமடியில் அம்பாளாய் ஆட்சி புறிந்தாய் வீட்டின் படியில் அம்மாவாய் காட்சி அளித்தாய் அம்மனுக்கு பூரண கழித்தல் என ஒரு ஐதீகம் அடுப்பங்கறையில் நெற்றி வியர்வை தாய்க்கு இயற்க்கை செய்யும் ஒரு நீராபிஷேகம் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவதரித்த என்  இறைவியே நீ வாழ்க! சமூகமேற்றிய கடமை தோளில் சுமந்து கட்டிய கணவனை நெஞ்சில் சுமந்து இன்னொரு உயிரை கருவில் சுமந்து மூன்றையும் இணைக்கும் கயிற்றை கழுத்தில் சுமக்கும் பராசக்தியின் வடிவான பெண்ணே இறைவியே நீ வாழ்க! மஹிஷாசுரனிடம் போராடி  அண்டம் காத்தாய் அன்று மது அருந்திய அரக்கனிடம்  தன்னை காக்க போராடுகிராய் இன்று கல்லானாலும் கனவன், புல்லானாலும் புருஷன்  என சொன்னது அந்த காலம் கள்ளு குடித்தாலும் கனவன் புகைப்பிடுத்தாலும் புருஷன்  என ஆனது இந்தக்காலம் கணவன் கால்கள் போதை மயக்கத்தில் ஒருபக்கம் நேர் கொண்ட பார்வையும் நிமிற்ந்த நன்னடையும் கட்டி பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் மற்றொரு பக்கம் இறைவி நீ வாழ்க!  எழுதியது - இரா.ராகவேந்திரன்

தாயுமாகி

கவிதை # 3 தலைப்பு : தாயுமாகி தாயின் கருவறை போல் அய்யனே! உனக்கொரு கருவறை இல்லாததால்!! நெஞ்சின் பெறுவறைக்குள் என்னை நீ சுமந்ததால்!  தாயுமாகி நின்றாய் அய்யனே என் முன்னால்!! சுரக்கும் தாய்ப்பாலில் என் உயிர் வளர்ந்தது! தந்தையின் உழைப்பில் உடல் வளர்ந்தது!! வியர்வையும் பாலும் ஒன்றென நான் அறிந்த நாள்! தாயுமாகி நின்றாய் அய்யனே என் முன்னால்!! கோவிலை காக்க இடிதாங்கியாய் கலசம் இருக்க! குடும்பமெனும் கோவிலை காக்கும் கலசமே என் தாதையே!! ஆசானாய் காவலனாய் உனை உணர்ந்தேன் இன்னாள்! தாயுமாகி நின்றாய் அய்யனே என் முன்னால்!! என் தந்தையின் திருப்பாதத்தில் சமர்ப்பனம்🙏🙏 -இரா.ராகவேந்திரன்

தமிழ் ஓர் மயக்கம்

பதிவு # 4 தலைப்பு : தமிழ் ஓர் மயக்கம் பூமியின் அடியில் சுரக்கும் நீருற்றாய்! என் மனதின் ஆழத்தில் நீ சுரந்தாய்!! காற்றில் நீர் என என்னுள் நீ இருக்க புல்லில் பணித்துளி போல் நீ என்           மனதில் தோன்றும் எண்ணமதை எழுதும் போது என்னுள் ஓர் தயக்கம் ஆம் தமிழ் ஓர் தீராத மயக்கம் கல்தோன்றி மண்தோன்றா காலமுன்பே! ஓம் எனும் சப்தமாய நீ ஒலிக்க!! ஈசனிடத்தே தோன்றும்  அறிவு கங்கையின் மொழியாய் நீ இருக்க! இத்தனை இனிய தமிழின் புகழ்  எதுவறை என என்னுள் ஓர் ஏக்கம்!! ஆதிசிவனே திருவாய் மலர்ந்து   தமிழில் அருள்வதால் அதன் புகழ் ஈசன் உள்ளவறை என தீர்க்கம்! உன்மை தமிழ் ஓர் தீராத மயக்கம்!! -இரா.ராகவேந்திரன்