சிவனே சீவன்

பதிவு: 9

தலைப்பு : சிவனே சீவன்

பிண்டமெனும் இக்கடத்தின் உள் இருப்பதனால் 'கடவுள்' என்கிறோம்
ஆரிருள் உய்க்கும் சாவை மீறியதனால் 'சாமி' என்கிறோம்
அணுவினுள் அண்டத்தை கண்டதனால் 'அனுமன்' என்கிறோம்
ப்ரம்மத்தை தன்னுள் அறிந்தவனை
பிராமணன் என்கிறோம்
சிவனே சீவன், சீவனே சிவன் என தம்மிதயம் பிரகாசமாக ஆக்க பெற்றாரை மனு ஈசன் என்கிறோம்

இதயகமலத்தில் வசிப்பவரென வைணவம் சொன்னது
ஈசனிருப்பிடம் இருதயத்திலே என சைவம் சொன்னது
இவையிரண்டும் ஓன்றென சான்றோர் சொன்னது
உடம்பினுள் உத்தமனைகான் என
அவ்வை சொன்னது
தம்முள் இறைவனை காண்பதே
பிறவிப்பயன் என வேதம் சொன்னது

தூலதேகம், ஜீவதேகம்,  சூக்குமதேகம், 
காரணதேகம், மாகாரணேதகம், ஹம்ஸதேகம், 
பரமஹமஸ தேகமென ஏழு வகை தேகத்தை
இவ்வுடம்பினுள் காட்டியே
சரணடைந்த எனை ஆட்கொண்டு
பிறப்பெனும் பிணியருக்க வந்த
என் குரு தாழ் போற்றி போற்றியே.

-இரா.ராகவேந்திரன்

Comments

Popular posts from this blog

சோழனும் தமிழனும்

நெஞ்சில் ஓர் ஈரம்!!

மெய்யறிவு அறிதல்