பூனூலின் வேதம்

பதிவு - 10

தலைப்பு - பூனூலின் வேதம்

உபநயனம் எனும் குருவருள் பெற்று
எக்ஞ்யோபவீதம் எனும் பூநூல் அணிந்தே
ப்ரம்மகிரன்தி என அதர்வ முடிச்சிட்டு
காயத்ரி எனும் ஜீவமந்திரம் உபதேசித்து
முப்புரி பூநூலில் வேதம் விளக்கியே
மெய்ப்பொருளை என்னுள்ளே
காட்டிய என் குருநாயகா போற்றியே

மும்மூர்த்தியும் முப்பெரும் தேவியை குறிக்கும் மூன்று நூல்
ருக், யஜுர், சாமவேத்தை குறிக்கும் மூன்று நூல்
சத்வ, ராஜஷ, தாமஸத்தை குறிக்கும் மூன்று நூல்
முக்காலத்தை குறிக்கும் மூன்று நூல்
விழிப்பு, கனவு, அமைதி எனும் 
அவஸ்தையை குறிக்கும் மூன்று 
இகம், பரம், அகலோகம் குறிக்கும் மூன்று நூல்
தியானம் பக்தி கர்மங்களை குறிக்கும் மூன்று நூல்
மூவகை அக்கினியை குறிக்கும்
 மூன்று நூலின் வேதம் விளக்கி 
என்னுள்ளே காட்டிய என் குருநாயகா போற்றியே

ப்ரம்மச்சர்யம் கடைப்பிடிப்போர்க்கு
மூன்று நூல்
க்ருஹஸ்தனாய் வாழ்வோருக்கு
ஆறுநூலும்
வனப்ரஸ்தனாக வாழ்வோருக்கு ஓம், 
அக்கினி, நாகம், சந்திரன், பித்ரூ, பிரஜாபதி, 
வாயு, யமன், விஷ்வதேவ னை குறிக்கும் 
ஓன்பது நூலில் வேதம் விளக்கியே
மெய்ப்பொருளை என்னுள்ளே
காட்டிய என் குருநாயகா போற்றியே
 
-இரா.ராகவேந்திரன்

Comments

Popular posts from this blog

சோழனும் தமிழனும்

நெஞ்சில் ஓர் ஈரம்!!

மெய்யறிவு அறிதல்