இன்பம் எங்கே

 பதிவு : 12

தலைப்பு : இன்பம் எங்கே


மாடமாளிகையில் வசித்திருந்தும்

பெட்டகமுழுதும் பொன்னிறைந்தும்

பெண்டுபிள்ளை அருகிறுந்தும்

கண்ணில் முன்னறியாதொரு ஏக்கம்

மனதில் இனம்புரியாதொரு பாரம்


பசிக்குமுன்பே ருசித்து உண்டும்

சிற்றினபம் நாடியடைந்த பின்பும்       

நிறைவடையா நிலவைப்போல்

வாழ்க்கை என்னும் சுழரும் வட்டம்

இதயமோரத்தில் ஏனோ ஓரு சோகம்


என்னவென்று வினா அரியாமல்

விடைதேடி நடைதுவங்கிய பயணம்

காடு மலை தேடி திரிந்து சரனடைய

அரியாமை எனும் பேரிருள் நீக்க

பெற்றதொரு மெய்குரு பொற்ப்பாதம்


ஞானமெனும் சுடரென்னுள் ஏற்றி

உள்ளம் கோவில் உடம்பே ஆலயம்

தன்னை அறிபவருக்கு சீவனே சிவம்

என என் இதயதில் ஈசனை காட்டி

நித்திய பேரின்பத்தில் ஆழ்த்திய  

குருநாயகா போற்றி போற்றியே.


இரா. ராகவேந்திரன்...

Comments

Popular posts from this blog

சோழனும் தமிழனும்

நெஞ்சில் ஓர் ஈரம்!!

மெய்யறிவு அறிதல்